தொந்திக் கணபதி

தொந்திக் கணபதி, வா வா வா. வந்தே ஒருவரம் தா தா தா.
கந்தனின் அண்ணா, வா வா வா. கனிவுடன் ஒருவரம் தா தா தா.

ஆனை முகத்துடன் வா வா வா. அவசியம் ஒருவரம் தா தா தா.
பானை வயிற்றுடன் வா வா வா. பணிந்தேன்; ஒருவரம் தா தா தா.
எல்லாம் அறிந்த கணபதியே, எவ்வரம் கேட்பேன், தெரியாதா?
நல்லவன் என்னும் ஒருபெயரை நான்பெற நீவரம் தா தா தா.