மரம் ஏறலாம் - maram Eralaam

தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.

Thennaimaraththil Eralaam

Thengaayai parikkalaam

மாமரத்தில் ஏறலாம்.
மாங்காயைப் பறிக்கலாம்.

maamarathithil Eralaam

maangaayai parikkalaam

புளியமரத்தில் ஏறலாம்.
புளியங்காயைப் பறிக்கலாம்.

puLiyamaraththil Eralaam

puLiyangaayai parikkalaam

நெல்லிமரத்தில் ஏறலாம்.
நெல்லிக்காயைப் பறிக்கலாம்.

nellimaraththil Eralaam

nellikkaayai parikkalaam

வாழைமரத்தில் ஏறினால்,
வழுக்கிவழுக்கி விழுகலாம்!

vaazhaimaraththil Eralaam

vazhukkivazhukki vizhugalaam